×

புதிய தலைமுறை ஹோண்டா சிஆர்வி

புதிய தலைமுறை ஹோண்டா சிஆர்வி எஸ்யூவி ரக கார், முதல்முறையாக புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட மாடலாக வெளியிடப்பட்டு இருக்கிறது. வரும் டிசம்பரில் அமெரிக்காவில் விற்பனைக்கு வர இருக்கும் இப்புதிய மாடல், அடுத்து இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்கு வர இருக்கிறது. இதில், முக்கிய மாற்றமாக, புதிய கிரில் அமைப்பு, பம்பர் அமைப்பு இடம்பெற்றுள்ளது. கிரில் அமைப்பில் பெரிய குரோம் சட்டமும், அதற்கு கீழாக கருப்பு வண்ண சட்டமும் இடம்பெற்றுள்ளது. இந்த காரில் புதிய பம்பர் அமைப்பு, எல்இடி பனி விளக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஏர்டேம் பகுதி குரோம் பீடிங்குடன் அழகாக காட்சி தருகிறது. பக்கவாட்டிலும், பின்புறத்திலும் பெரிய மாற்றங்கள் இல்லை. புதிய 19 அங்குல அலாய் வீல் இடம்பெற்றுள்ளது. பின்புறத்தில் புதிய வடிவிலான ஸ்கிட் பிளேட்டுகள் உள்ளன. இன்டீரியரிலும் எந்த மாற்றங்களும் இல்லை. இந்த காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன்கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே செயலிகளை சப்போர்ட் செய்யும். அத்துடன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் சிஸ்டமும் இடம்பெற்றுள்ளது. டியூவல் ஸோன் ஆட்டோமேட்டிக் ஏசி சிஸ்டம் மற்றும் ஓட்டுனருக்கு காரின் இயக்கம் குறித்த தகவல்களை பெறுவதற்கான தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் சிஆர்வி ஹைப்ரிட் மாடல் இருக்கிறது. ஆனால், தற்போது அமெரிக்காவிலும் ஹைப்ரிட் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஹோண்டா அக்கார்டு காரில் பயன்படுத்தப்படும் அதே ஹைப்ரிட் சிஸ்டம்தான் இதிலும் இடம்பெற்றுள்ளது. இந்த காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இரண்டு மின்மோட்டார்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இ-சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் இன்ஜின் மற்றும் மின் மோட்டார்களை தனித்தனியாகவும், ஹைப்ரிட் மோடிலும் வைத்து இயக்க முடியும். இப்புதிய கார், 7 சீட்டர் மாடல் மற்றும் டீசல் இன்ஜின் தேர்விலும் கிடைக்கிறது. இந்தியாவில், இதன் டீசல் இன்ஜின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. மேலும், புதிய எரிபொருள் சிக்கன தர நிர்ணயத்திற்காக, ஹைப்ரிட் மாடலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது. அடுத்த ஆண்டு இறுதியில் இதன் பேஸ்லிப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கோடா கோடியாக், போர்டு எண்டெவர், டொயோட்டா பார்ச்சூனர் கார்களுக்கு இது போட்டியாக இருக்கும். விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.

Tags : Generation ,Honda , HONDA CRV
× RELATED தேர்தலில் வாக்களித்தது புதிய...