×

சவூதி தாக்குதலால் காஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு அபாயம்

புதுடெல்லி: பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில், சில மாநிலங்களில் சமையல் காஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. சவூதியில் அராம்கோ நிறுவன கச்சா எண்ணெய் கிணறுகள் மீது 2 வாரம் முன்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் பேரல் 72 டாலரை நெருங்கிய கச்சா எண்ணெய் விலை, தற்போது 61 டாலர் முதல் 62 டாலர் வரை விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் உற்பத்தி விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில், அராம்கோ எண்ணெய் கிணறுகள் தாக்குதலால் சவூதியில் இருந்து எல்பிஜி சப்ளை சற்று பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக வர வேண்டிய அளவை விட குறைவதால் மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளில் காஸ் சிலிண்டர் சப்ளை செய்ய 10 முதல் 15 நாட்கள் தாமதம் ஆகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், எல்பிஜி சப்ளை மேலும் பாதிக்கப்பட்டால் நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகும் என கூறப்படுகிறது.

Tags : attack ,Saudi , Saudi Assault, Gas Cylinder, Danger
× RELATED போராட்டம் நடத்த இருந்த நிலையில்...