×

பாஜ எம்எல்ஏ மீதான பாலியல் வழக்கு அக்.17ல் விசாரணை

பனாஜி: கோவா மாநிலத்தில் பாஜ எம்எல்ஏ அடானாசியோ மீதான பாலியல் பலாத்கார வழக்கு விசாரணை, அக்டோபர் 17ம் தேதி முதல் நடத்தப்பட உள்ளது.கோவா மாநிலம், பனாஜி சட்டப்பேரவை தொகுதி பாஜ எம்எல்ஏ அடானாசியோ மான்செரட்டே (55). இவர் மீது கடந்த 2016ம் ஆண்டு 16 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கூறினார். அடானாசியோ விடம், தனது தாய் தன்னை ரூ.50 லட்சத்துக்கு விற்று விட்டதாகவும் குற்றம்சாட்டினார். இந்த வழக்கில் அதே ஆண்டு மே 5ல் அடானாசியோ கைது செய்யப்பட்டார். தற்போது, ஜாமீனில் உள்ளார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அக்டோபர் 17ம் தேதி முதல் விசாரணை தொடங்குகிறது.


Tags : Baja MLA , Baja, MLA,sex,Oct. 17
× RELATED 25 ஆண்டுகள் சிறை தண்டனை சிறுமி பலாத்கார...