×

காவலர் எழுத்து தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடு: சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் 2,465 இரண்டாம் நிலைக் காவலர்கள் (ஆயுதப்படை), 5,962 இரண்டாம் நிலைக் காவலர்கள் (தமிழ்நாடு சிறப்புக் காவல் படை), 208 இரண்டாம் நிலை சிறை காவலர்கள் மற்றும் 191 தீயணைப்போர் பதவி என 8,826 பணியிடங்களுக்கும் இது தவிர 62 பின்னடைவு பணியிடங்கள் என மொத்தம் 8,888 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 6ம் தேதி வெளியிட்டது.  10ம் வகுப்பு தேர்ச்சி தான் கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் என்று போட்டி போட்டு கொண்டு மாநிலம் முழுவதும் சுமார் 3.22 லட்சம் பேர் விண்ணப்பித்த்திருந்தனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த மாதம் 25ம் தேதி சென்னையில் 13 மையங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் 228 மைங்களில் நடந்தது.

  80 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. பொது அறிவியல் 50 கேள்விகளும், உளவியலில் 30 கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தது. வினாக்கள் ஆப்ஜெக்டிவ் வடிவில் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் எழுத்து ேதர்வுக்கான முடிவுகள் சீருடைப்பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் இணையதளத்தில் ேநற்று மாலை வெளியிட்டது. தேர்வு எழுதிய நபர்கள் தங்களது பதிவெண்களை www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் பதிவு ெசய்து முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இதில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு, உடற்திறன் போட்டி மற்றும் அசல் சான்றிதழ் சரிபார்த்தல் 1:5 விகிதத்தில் கலந்து கொள்வார்கள். தேர்வில் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கான அழைப்பு கடிதம் விரைவில் இக்குழும இணையதளத்தில் வெளியிடப்படும்.

Tags : Guard writing choice, uniform pick
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...