×

தனுஷ்கோடியில் மணல் புயல்

ராமேஸ்வரம்: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால், தனுஷ்கோடி தென் கடல் பகுதி நேற்று கொந்தளிப்பாக காணப்பட்டது. பலத்த காற்றினால் மணல் புயல் கடற்கரை சாலையில் வீசியது. இதனால் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அரிச்சல்முனைக்கு செல்லும் பகுதியில் சாலை முழுவதும் காற்றுடன் மணலும் சேர்ந்து பறந்தது. காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால் அதிகளவில் தனுஷ்கோடிக்கு வந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் இந்த மணல் புயலில் சிக்கியது. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். இன்னும் 2 நாட்கள் தொடர்ந்து காற்று வீசினால் தனுஷ்கோடி பகுதியில் சாலையில் மணல் மேடாகி போக்குவரத்து முற்றிலும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

Tags : Sandstorm ,Dhanushkodi ,Danushkodi Sand Storm , Danushkodi, Sand ,Storm
× RELATED கடல் நீர்த்தேக்கத்தில் தடுப்புவேலி அமைத்து மீன் பிடிப்பு