- மூணாறு
- போடி மேட்டு
- கொச்சி-
- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை
- முன்னார், கேரளா
- கொச்சி,
- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை, மூணாறு
- தின மலர்
மூணாறு, ஜூலை 13: கேரளா மாநிலம் மூணாறில் கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு முதல் போடி மெட்டு வரை 87 சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற மீண்டும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை, மூணாறு முதல் போடி மெட்டு வரை, உடுமலைபேட்டை ரோடு, மாட்டுப்பட்டி ரோடு மற்றும் மூணாறு நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் ரோடு, வழியோரம் ஆகியவற்றை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளன.
அவற்றின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. கலெக்டர் ஷீபா ஜார்ஜ் உத்தரவுபடி தேவிகுளம் சப் கலெக்டர் ஜெயகிருஷ்ணன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. அதில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதன் பாகமாக இரண்டு முறை நோட்டிஸ் கொடுக்கப்பட்டன. இந்நிலையில் கடை உரிமையாளர்கள் கடைகளை அகற்ற முன் வராததால் கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 87 கடைகளுக்கு மீண்டும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
The post மூணாறில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நோட்டீஸ் appeared first on Dinakaran.