×

பார்த்தசாரதி கோயிலுக்கு 1.30 கோடியில் நவரத்தின கற்கள் பதித்த ரத்னாங்கி கவசம் காணிக்கை: கோயில் நிர்வாகம் தகவல்

சென்னை: பார்த்தசாரதி கோயிலுக்கு 1.30 கோடி மதிப்பில் நவரத்தின கற்கள் பதித்த ரத்னாங்கி கவசம் பக்தர் காணிக்கை அளித்து இருப்பதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 108 வைணவதலங்களில் மிகவும் பிரசித்த பெற்ற திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில். இந்த கோயிலுக்கு பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற  பணமோ, நகையோ காணிக்கை அளிப்பது வழக்கமான ஒன்று. இந்த நிலையில் வெங்கட்ராமன் குடும்பத்தினர் சார்பாக நவரத்தின கற்கள் பதித்த ரத்னாங்கி கவசம் சுமார் 1.30 கோடி மதிப்பில் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த ரத்னாங்கி கவசம் இன்று  பார்த்தசாரதி சுவாமி உற்சவருக்கு சாத்துப்படி செய்யப்பட்டு மாலை 6.30 மணிக்கு தரிசனமும், இரவு 7 மணிக்கு மயிலை பேயாழ்வாருடன் பெரிய வீதி புறப்பாடும் நடைபெறும் என்று பார்த்தசாரதி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Tags : Parthasarathy Temple ,administration ,Temple , Parthasarathy Temple, Embroidered stones, Temple ,
× RELATED பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை,...