×

நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரசார் 26 பேர் விருப்ப மனு : இன்று மாலை நேர்காணல்

சென்னை: நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை 26 பேர் விருப்ப மனுக்களை பெற்றுள்ளனர். அவர்களிடம் இன்று மாலை நேர்காணல் நடத்தப்பட்டு வேட்பாளர் தேர்வு செய்யப்படுகிறார். நாங்குநேரி தொகுதிக்கு அடுத்த மாதம் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு, மீண்டும் நாங்குநேரி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ள சேலம் பாலு, எஸ்.ஏ.வாசு, பி.வி.சிவகுமார் ஆகியோர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் விண்ணப்ப கட்டணமாக 1000 செலுத்தி விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர். விண்ணப்ப படிவம் பெற்றவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களுடன் கட்டணமாக பொதுப்பிரிவினர் 25 ஆயிரம், மகளிர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் 10 ஆயிரம் வரைவோலையாக செலுத்த வேண்டும். 5 மணிக்கு மேல் விருப்ப மனு அளித்தவர்களிடம் கே.எஸ்.அழகிரி நேர்காணல் நடத்த உள்ளார்.அப்போது தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனையுடன் வேட்பாளர் தேர்வு செய்யப்படுகிறார். அதற்கான முடிவு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைக்கப்படும். அவரது ஒப்புதலுடன் ஓரிரு நாளில் நாங்குநேரி தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்.
 
கடந்த இரண்டு நாட்களாக மூத்த தலைவர் குமரி அனந்தன், தாஸ் பாண்டியன், நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் சிவகுமார், நடிகர் விஜய் வசந்த்துக்காக விஜயகுமார் என்பவரும், ரூபி மனோகருக்காக விஜய் ஆனந்த் என்பவரும், பிரபு நல்லதம்பி மற்றும் இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் போட்டியிட நாங்குநேரி வட்டார தலைவர் டியூக் துரைராஜ் உட்பட 7 பேரும் விண்ணப்பம் பெற்றுள்ளனர். மொத்தம் இதுவரை 26 பேர் விருப்ப மனுக்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Congressmen ,Nanguneri , 26 Congressmen willing , contest Nanguneri by-election
× RELATED “ராபர்ட் ப்ரூஸுக்கு அர்ப்பணிப்புடன்...