×

ஏரிக்கரையை உடைத்தவர்களை தாக்கியதாக கைது: பாமக பிரமுகர் பாலயோகி ஜாமீனில் விடுதலை

சென்னை: திருவள்ளூர் ஏரிக்கரையை உடைத்தவர்களை தாக்கியதாக கைது செய்யப்பட்ட பாமக பிரமுகர் பாலயோகி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேல்நல்லாத்தூர் ஏரிக்கரையை ஜே.சி.பி இயந்திரம் மூலம் உடைத்த தனியார் நிறுவன ஊழியர்களை பாலயோகி தாக்கியதாக புகார் எழுந்தது. டி.எஸ்.பி கங்காதரன் தலைமையிலான போலீஸ் பாலயோகியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா, பாலயோகியை ஜாமினில் விடுவித்து உத்தரவிட்டார்.

Tags : lake-dwellers ,Lake ,Balayogi , Lake, pmk, Balayogi
× RELATED காணாமல்போன கூரியர் நிறுவன ஊழியர்...