×

தாம்பரம்- நெல்லை இடையே சுவீதா சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தாம்பரம்- நெல்லை இடையே சுவீதா சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: விழுப்புரம்- செகந்ராபாத் இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரயில் அக்டோபர் 2, 9, 23, 30 ஆகிய தேதிகளில் மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 8.25 மணிக்கு செகந்ராபாத் சென்றடையும். அதைப்போன்று தாம்பரம்- திருச்சி இடையே சிறப்பு கட்டண ரயில்கள் அக்டோபர் 9ம் தேதி மாலை 5 மணிக்கு புறப்பட்டு இரவு 10 மணிக்கு திருச்சி சென்றடையும். அதைப்போன்று திருச்சி- தாம்பரம் இடையே சிறப்பு ரயில் அக்டோபர் 5ம் தேதி பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 7.15மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

மேலும் தாம்பரம்- நெல்லை இடையே சுவீதா சிறப்பு கட்டண சிறப்பு ரயில் அக்டோபர் 5ம் தேதி இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.45 மணிக்கு நெல்லை சென்றடையும். அதைப்போன்று நெல்லை- தாம்பரம் இடையே சுவீதா சிறப்பு கட்டண ரயில் அக்டோபர் 8ம் தேதி இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மேலும் இந்த சிறப்பு கட்டண ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்படும்.
மேலும், எர்ணாகுளம்- ராமேஸ்வரம் இடையே சிறப்பு கட்டண ரயில் அக்டோபர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.10 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.

அதைப்போன்று ராமேஸ்வரம்- எர்ணாகுளம் இடையே சிறப்பு கட்டண ரயில் அக்டோபர் 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் இரவு 8.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.45மணிக்கு எர்ணாகுளம் சந்திப்புக்கு சென்றடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன் பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Southern Railway ,Tambaram ,Paddy Tambaram ,Paddy , Tambaram, Paddy, Suvidha Special Trains, Southern Railway
× RELATED நாளை முதல் குறிப்பிட்ட மையங்களில்...