×

திருப்பூர் லக்கி நகரில் சேறு, சகதியான சாலையால் வாகன ஓட்டிகள் பாதிப்பு

திருப்பூர்: திருப்பூர் லக்கி நகர் பகுதியில் சாலை சேறும், சகதியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருப்பூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ளது லக்கி நகர். இங்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள், வணிக நிறுவனங்களும் இயங்கி வருகிறது. தொழிலாளர்கள் அனைவரும் லக்கிநகர் சாலையைதான் பயன்படுத்துகிறார்கள். மேலும் லக்கிநகர் வழியாக பி.என். ரோட்டுக்கு செல்லும் வாகனங்களும் அதிகளவில் சென்று வருகிறது. லக்கி நகர் பகுதியில் தார்சாலை வசதி இல்லாததால் அப்பகுதியில் உள்ள ரோடுகள் சேறும், சகதியுமாக மாறி காணப்படுகிறது.

இதனால் இந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பு அடைகிறார்கள். இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, ‘‘லக்கி நகர் பகுதியில் தார் ரோடு வசதி கேட்டு பல முறை மாநகராட்சியிலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தோம். அந்த மனுவிற்கு இன்று வரையிலும் நடவடிக்கை இல்லை. சேறும் சகதியுமாக இருக்கும் ரோட்டால் வாகன ஓட்டிகள் விபத்திற்கு உள்ளாகிறார்கள். இதனால் இப்பகுதியில் உடனடியாக தார்ரோடு அமைக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.

Tags : Motorists ,roads , Tirupur, mud, busy road, motorists, impact
× RELATED சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க புதிய பணியாளர்கள்!