×

சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு 14 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்கிறது. இதனால் டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருகிறது. ஏராளமானோர் அரசு மருத்துவமனைகளிலும்,  தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகின்றனர். வழக்கமாக வடகிழக்கு பருவமழை பெய்யும் காலக்கட்டத்திலேயே தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கும். தற்ேபாது வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, ராஜிவ் காந்தி  மருத்துவமனையில் 100 படுக்கை கொண்ட இரண்டு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவை 24 மணிநேரமும் செயல்படுகிறது.

சில நாட்களுக்குள் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சம்பந்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள 80 பேரில் 9 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கீழ்ப்பாக்கம் அரசு  மருத்துவமனையில் 4 பேருக்கும், ராயப்பேட்டையில் ஒருவருக்கும் உறுதியாகியுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சர், சிகிச்சைபெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.  நீர் சத்து குறையாமல் இருக்க, நீர் உணவுகளை வழங்கினார். இது குறித்து நோயாளிகளின் உறவினர்கள் கூறுகையில், அரசு இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றனர்.

Tags : Chennai , dengue fever ,Chennai, hospitalized
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...