×

பல்கலை மாணவர் நீக்கத்தை கண்டித்து சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் போராட்டம்

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் விதிகளுக்கு முரணாக மாணவர்  டிஸ்மிஸ் செய்யப்பட்டதை கண்டித்து மாநில கல்லூரி மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பல்கலைக்கழகத்தின் தத்துவவியல் துறையின்கீழ் எம்.ஏ புத்தமதவியல் படிக்க சேர்ந்த மாணவர் கிருபாமோகன் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதை கண்டித்து கடந்த 5ம் தேதி சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தை சேர்ந்த 25க்கும் அதிகமான மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விதிகளுக்கு முரணாக பல்கலைக்கழகம் செயல்படுவதாக குற்றம்சாட்டினர். இந்தநிலையில், சென்னை பல்கலைக்கழக மாணவர் கிருபாமோகன் நீக்கப்பட்டதை கண்டித்து மாநில கல்லூரி மாணவர்கள் நேற்று கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பல்கலைக்கழகத்திற்கு எதிராக கோசங்களை எழுப்பியும், கைகளில் பதாகைகளில் ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறியதாவது: ஏற்கனவே சென்னை பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்கள் தகுதிச்சான்று சமர்ப்பிக்கத் தேவையில்லை. ஆனால் சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர் கிருபா மோகன் தகுதிச்சான்று சமர்ப்பிக்காததால் அவர் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்படுவதாக வாய்மொழியாக அவருக்கு கூறப்பட்டுள்ளது. அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தின் முன்னாள் செயலாளர் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   மாணவர்கள் பொதுக் காரணங்களுக்காக போராடுவது அவரவர் விருப்பம். ஆனால்  திட்டமிட்டு விதிகளுக்கு முரணாக பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கியுள்ளனர். எனவே இதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். மீண்டும் பல்கலைக்கழகத்தில் அவரை சேர்த்து கொள்ள வேண்டும்.




Tags : protest ,Chennai State College , University student dismissal, Madras State College students, struggle
× RELATED காலி பணியிடங்களை நிரப்பக்கோரி ரயில்வே சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்