×

அமெரிக்கா லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் கழிவுநீர் மறுசுழற்சி நிலையத்தை எடப்பாடி பார்வையிட்டார்

சென்னை: அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கழிவுநீர் மறுசுழற்சி நிலையத்தை முதல்வர் எடப்பாடி பார்வையிட்டார்.அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் (6ம் தேதி) சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றார். அங்கு விமான நிலையத்தில், அமெரிக்க வாழ் தமிழர்கள் அவருக்கு உற்சாக  வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, லாஸ் ஏஞ்சல்ஸ், அனாஹெய்ம் நகரில் உள்ள கழிவுநீர் மறுசுழற்சி நிலையத்தை முதல்வர் எடப்பாடி மற்றும் தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் பார்வையிட்டனர். அந்த நிறுவனத்தினர், முதல்வரிடம், கழிவுநீரை மறுசுழற்சி மூலம்  சுத்தமாக்கி மீண்டும் அதனை பயன்படுத்தும் முறை குறித்து விளக்கினார்கள்.

அப்போது, தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், வருவாய் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பால்வள துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தலைமை செயலாளர் சண்முகம், தொழில் துறை  செயலாளர் முருகானந்தம், கால்நடை பராமரிப்பு, பால்வள துறை செயலாளர் கோபால், தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலாளர் சந்தோஷ் பாபு, முதல்வரின் செயலாளர்கள் விஜயகுமார், ஜெய முரளிதரன் உடனிருந்தனர்.

Tags : sewage treatment plant ,USA ,Los Angeles , Los Angeles, USA,sewage, plant
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!