×

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட, உள் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்றின் சங்கமத்தின் காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவகாற்று காரணமாக கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கனமழைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.


Tags : Mild,rainfall,expected , Puducherry, Tamil Nadu
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...