×

ஆட்டோமொபைல்

* புதிய இசுஸு வி கிராஸ் பிக்கப் டிரக்:
ஆப்ரோடு பிரியர்களுக்கான சிறந்த பிக்கப் டிரக் வகை தேர்வு மாடலாக இசுஸு வி கிராஸ் வந்துள்ளது. இது, இந்தியர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்புதிய வேரியண்ட்டில் 1.9 லிட்டர் டீசல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.புதிய இன்ஜின், கியர்பாக்ஸ் மட்டுமின்றி, ஏராளமான கூடுதல் சிறப்பம்சங்களை இப்புதிய இசட் பிரஸ்டீஜ் வேரியண்ட் பெற்றுள்ளது. பழுப்பு மற்றும் சாம்பல் வண்ணத்திலான இரட்டை வண்ண லெதர் சீட், சாப்ட் டச் டேஷ்போர்டு அமைப்பு, புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இடம்பெற்றுள்ளது. புதிய சரவுண்ட் ஸ்பீக்கர்களுடன் மியூசிக் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பை-எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட், எல்இடி பகல்நேர விளக்கு, 18 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல், ஸ்போர்ட்டியான ரூப் ரெயில்கள், ஷார்க் பின் ஆன்டென்னா, கருப்பு வண்ணத்திலான பி மற்றும் சி பில்லர்கள் என மிக கவர்ச்சிகரமாக வந்துள்ளது.

இப்புதிய பிக்கப் டிரக்கில் 6 ஏர்பேக், பிரேக் ஓவர்ரைடு தொழில்நுட்பம் கொண்ட சீட் பெல்ட் வார்னிங் சிஸ்டம், ஹை ஸ்பீடு அலர்ட் மற்றும் ஐசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இப்புதிய மாடலானது ஸ்டான்டர்டு, இசட் மற்றும் இசட் பிரஸ்டீஜ் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும். சபையர் புளூ, ரூபி ரெட், பியர்ல் ஒயிட் மற்றும் காஸ்மிக் பிளாக் ஆகிய வண்ணத்தேர்வுகளில் கிடைக்கிறது. இசட் பிரஸ்டீஜ் வேரியண்ட்டில் 1.9 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும் நிலையில், இதர வேரியண்ட்டுகளில் 2.5 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 135 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. பிரஸ்டீஜ் வேரியண்ட்டிற்கு ரூ.19.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பிரிமீயம் ஆப்ரோடு பிக்கப் டிரக் வாங்க திட்டமிடுவோருக்கு இது மிகச்சிறந்த தேர்வாக அமைந்துள்ளது.

* இந்தியாவில் களம் இறங்கும் சிஎப் மோட்டோ 250 சிசி ஸ்போர்ட்ஸ் பைக்:
சீனாவை சேர்ந்த சிஎப் மோட்டோ நிறுவனம் இந்தியாவில் ஏஎம்டபிள்யூ நிறுவனத்துடன் இணைந்து வர்த்தகத்தை துவக்கியுள்ளது. கடந்த மே மாதம் சீனாவில் காட்சிக்கு கொண்டு வரப்பட்ட சிஎப் மோட்டோ 250 எஸ்ஆர் என்ற அந்த ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்ய இந்த கூட்டணி திட்டமிட்டுள்ளது. இப்புதிய சிஎப் மோட்டோ 250 எஸ்ஆர் பைக்கில் டிஎப்டி திரையுடன்கூடிய வண்ணத்திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் 249.2 சிசி லிக்யூடு கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 26 பிஎச்பி பவரையும், 22 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கில் எலெக்ட்ரானிக் பியூவல் இன்ஜெக்க்ஷன் சிஸ்டமும் இடம்பெற்றுள்ளது. முன்புறத்தில் அப்சைடு டவுன் போர்க் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் இடம்பெற்றுள்ளது. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இப்புதிய சிஎப் மோட்டோ 250 எஸ்ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டா சிபிஆர் 250ஆர், சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எப் 250 மற்றும் கேடிஎம் ஆர்சி 200 பைக் மாடல்களுடன் இந்த பைக் போட்டி போடும். விலை விவரம் அறிவிக்கப்படவில்லை. சிஎப் மோட்டோ நிறுவனம் சீனாவில் கேடிஎம் நிறுவனத்தின் கூட்டணியில் இணைந்து வர்த்தகம் செய்து வருகிறது. மேலும், கேடிஎம் பைக்குகளின் டிசைன் உரிமத்தை பெற்று பைக்குகளை வடிவமைத்து வருகிறது. இதனால், கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட மாடல்களில் கேடிஎம் பைக்குகளின் சாயல் பிரதிபலித்தது குறிப்பிடத்தக்கது.

* ரூ.50 லட்சத்தில் அசத்தல் எலெக்ட்ரிக் பைக்:
அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம் லைவ் வயர் என்ற பெயரில் முதல் எலெக்ட்ரிக் பைக் மாடலை உருவாக்கி இருக்கிறது. இது, இந்திய பைக் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆற்றல் வாய்ந்த 15.5 kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக், மணிக்கு 185 கிமீ வேகம் வரை செல்லும் விதத்தில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் நகர்ப்புற பயன்பாட்டில் 235 கி.மீ தூரம் வரையிலும், நெடுஞ்சாலையில் 113 கிமீ தூரம் வரையிலும் பயணிக்க முடியும். 25W 3 ஸ்டேஜ் பாஸ்ட் சார்ஜர் மூலமாக பேட்டரியை ஒரு மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். இப்புதிய பைக், புத்தம் புதிய பிரேமில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் டிரெல்லிஸ் பிரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இதன் வடிவமைப்பு வழக்கமான ஹார்லி டேவிட்சன் பைக்குகளில் இருந்து முற்றிலும் வேறுபடுகிறது. முன்புறத்தில் ஷோவா இன்வெர்டெட் டெலிஸ்கோப்பிக் போர்க், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் உள்ளன.முன்சக்கரத்தில் 4 பிஸ்டன் பிரெம்போ ரேடியல் காலிபர்கள் மற்றும் இரண்டு 300 மி.மீ விட்டமுடைய டிஸ்க் பிரேக், பின்சக்கரத்தில் 2 பிஸ்டன் காலிபர் மற்றும் 260 மி.மீ சிங்கிள் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. கார்னரிங் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் முக்கிய அம்சமாக இருக்கிறது. இந்த பைக் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் என்பதால், வரி உள்பட ரூ.50 லட்சத்தை நெருங்கலாம் என கருதப்படுகிறது.

* புதிய மாருதி சுஸுகி எக்ஸ்எல் 6:
மாருதி சுஸுகி நிறுவனம், அதன் புத்தம் புதிய எக்ஸ்எல்6 காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார், நெக்ஸா ஷோரூம் வழியாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்படும் முதல் எம்பிவி ரக கார் என்ற பெருமையை இப்புதிய எக்ஸ்எல்-6 கார் பெற்றுள்ளது. இப்புதிய கார், ஜெட்டா மற்றும் ஆல்பா ஆகிய இரு விதமான பெட்ரோல் வேரியண்டுகளில் கிடைக்கிறது. இந்த காருக்கான புக்கிங் ரூ.11 ஆயிரம் என்ற முன்தொகையில் ஏற்கனவே துவங்கிவிட்டது. இந்த கார், அதிக இடவசதியை கொண்ட மாடலாக களமிறங்கியுள்ளது. இதன் நீளம் 4,445 மி.மீட்டராகவும், அகலம் 1,775 மி.மீட்டராகவும், உயரம் 1,700 மி.மீட்டராகவும் உள்ளது.

இந்த காரின் பூட் ஸ்பேஸ் 209 லிட்டராக உள்ளது. பின் இருக்கையை மடித்து வைத்துக்கொள்வதன் மூலம் இதனை அதிகரித்துக்கொள்ள முடியும். இப்புதிய கார், எர்டிகா மாடலை தழுவி உருவாக்கப்பட்டாலும், சில தனித்துவமான டிசைன் தாத்பரியங்களை பெற்றுள்ளது. அந்தவகையில், பிரத்யேகமான கிளாடிங் அமைப்பை காரின் அனைத்து பகுதிக்கும் மாருதி சுஸுகி வழங்கியுள்ளது. இத்துடன், பிளாக்கட் அவுட் மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிசைன் அதன் முகப்பு பகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, அலாய் வீல், மல்டி ரெப்ளெக்டர், எல்இடி மின் விளக்கு மற்றும் டிஆர்எல் உள்ளிட்டவற்றிற்கும் புது டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்டீரியரிலும் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், புதிய டார்க் நிறம் கொண்ட டேஷ்போர்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரில் கே15பி 1.5 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்ட் 4-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 104.69 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. இந்த கார் மாடலில் டீசல் ஆப்ஷன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மதிப்புகூட்டப்பட்ட அம்சமாக 7 இன்ச் அளவிலான ஸ்மார்ட் ப்ளே ஸ்டுடியோ டச் ஸ்கிரீன் இன்போடெயிண்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், பனி விளக்கு, எல்இடி ஹெட்லேம்ப், டிஆர்எல், ரூப் ரெயில்கள் மற்றும் கான்ட்ராஸ்ட் ஓஆர்விஎம்கள் இடம்பெற்றுள்ளன.

மிக முக்கியமாக, இவற்றுடன் பாதுகாப்பு வசதியாக டியூவல் ஏர்பேக் மற்றும் இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி உள்ளது. இதில், உயர் ரக மாடலாக களமிறங்கும் ஆல்பா டிரிம்மில் லெதர் இருக்கை, எலக்ட்ரிக்கலாக போல்ட் செய்யும் ஓஆர்விஎம்கள், பிளாக் அலாய் வீல், ஆட்டோ ஹெட்லேம்ப் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இத்துடன், ஆட்டோமேட்டிக் வேரியண்டுகளில் இஎஸ்பி மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு, ரூ.9 லட்சம் முதல் ரூ.11.5 லட்சம் வரை (டெல்லி எக்ஸ்ஷோரூம்) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags : Automobile
× RELATED இனி ஓட்டுநர் இல்லாமலேயே பயணிக்கலாம்!:...