×

முகக்கவசம் போடலனா ரூ.200, எச்சில் துப்புனா ரூ. 500, சலூன், ஜிம்-ல விதிகளை மீறுனா ரூ. 5000 : சென்னையில் புது ரூல்ஸ்!!

சென்னை : சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பிறப்பித்துள்ள வழிமுறைகளை மீறுபவர்களிடமிருந்து பின்வரும் அட்டவணையின் படி அபராதத் தொகை வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. *சென்னையில் மாஸ்க் முழுமையாக அணியாவிட்டால் ரூ. 200 அபராதம் *பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ. 500 அபராதம் *கொரோனா குவாரன்டைன் விதியை மீறினால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும். *சென்னையில் பொது இடங்களில் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்காவிடில் ரூ. 500 அபராதம் *சென்னையில் கொரோனா விதிகளை மீறுவோரிடம் நாள்தோறும் ரூ.10 லட்சம் வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. *வணிக வளாகங்கள், சலூன்கள், ஜிம் உள்ளிட்ட இடங்களில் விதிகளை பின்பற்றாவிடில் ரூ. 5000 அபராதம் வசூலிக்கப்படும்.*சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ. 5000 அபராதம் *2 முறைக்கு மேல் கொரோனா விதிகளை மீறினால் கடை, நிறுவனம், அலுவலகத்திற்கு சீல் வைக்கப்படும்.*சென்னையில் கொரோனா விதிகளை மீறுவோரிடம் இருந்து அபராதம் வசூலிக்க மண்டலம் வாரியாக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  *ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் தினமும் ரூ.1.50 லட்சம் அபராதம் வசூலிக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது….

The post முகக்கவசம் போடலனா ரூ.200, எச்சில் துப்புனா ரூ. 500, சலூன், ஜிம்-ல விதிகளை மீறுனா ரூ. 5000 : சென்னையில் புது ரூல்ஸ்!! appeared first on Dinakaran.

Tags : Sagil Tuppuna ,Saloon ,Gym-La ,Chennai ,Chennai Corporation ,
× RELATED ஆர்ஜே பாலாஜி ஜோடியாக மீனாட்சி சவுத்ரி