×

வண்டலூர் பூங்காவிற்கு 2 ராஜநாகம் வருகை

சென்னை:  மத்திய உயிரியல் பூங்கா ஆணைய அனுமதியுடன் கர்நாடக மாநிலம் பிலிகுலா உயிரியல் பூங்காவிலிருந்து வண்டலூர் பூங்காவிற்கு 2 ராஜநாகங்கள் பெறப்பட்டன. தற்போது இப்பாம்புகள் அதற்கான அடைப்பிடத்தில் விடப்பட்டு பார்வையாளர்கள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பாம்புகளுக்கு மாற்றாக இப் பூங்காவிலிருந்து இரண்டு காட்டு மாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய ராஜநாகங்கள் அடைப்பிடத்தில், இயற்கையான வாழ்விடத்தையொத்த சுற்றுச்சூழல் வளமைப்படுத்தும் பணிகளும், குறைவான வெப்பநிலையைப் பராமரிக்கும் சூழலும் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு சிறு அருவிகளும் நீரோடையும் அமைக்கப்பட்டுள்ளது.  இன்று முதல் பார்வையாளர்கள் பாம்புகள் இல்லம் அருகில் உள்ள இந்த அடைப்பிடத்தைக் கண்ணாடி வழியே பாம்பின் மிக அருகில் நின்று கண்டுகளிக்கலாம்.

Tags : Visit Vandalur Park ,2 Rajanagam
× RELATED வாக்கு எண்ணிக்கை மையங்களில்...