×

நதிகளை தேசியமயமாக்கும் எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை: மத்திய இணை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா திட்டவட்டம்

புதுடெல்லி: நதிகளை தேசியமயமாக்கும் எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய ஜலசக்தி துறை இணை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா தெரிவித்துள்ளார். கோதாவரி, காவிரி ஆகிய நதிகளை இணைத்து அதன்மூலமாக கூடுதல் தண்ணீரை தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு கிடைக்கச் செய்யலாம் என்ற திட்டம் லோசிக்கப்பட்டு வந்த நிலையில், அவ்வாறு செய்வதன் மூலமாக மத்திய அரசு நதிகளை தேசியமயமாக்குமோ என்ற கருத்து நிலவி வருகிறது. இந்த நிலையில், திமுக உ.றுப்பினர் திருச்சி சிவா, இன்று மாநிலங்களவையில் நதிகள் இணைப்பு குறித்து கேள்வி எழுப்பினார். அதிலே, நதிகள் தேசியமயமாக்கும் திட்டம் உள்ளதா என் வினவினார். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா, நதிகளை தேசியமயமாக்கும் எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதைத்தவிர மகாநதி, கோதாவரி, பெண்ணாறு, காவிரி, வைகை, கிருஷ்ணா ஆகிய நதிகளை இணைக்கும் திட்டம் இருப்பதாகவும், இதன் இறுதி கட்டமாக காவிரி வைகை, குண்டாறு இணைப்பு இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஆகவே, நதிகள் தேசியமயமாகும் என்று இருந்த அச்சத்திற்கு இன்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. அதே சமயம், தொடர்ந்து நதிகளை இணைக்கும் திட்டம் மூலமாக கூடுதல் தண்ணீரை தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு அளிக்க வேண்டுமென்ற நோக்கம் உள்ளதையும் மத்திய அரசு தெளிவாக்கியுள்ளது. ஏற்கனவே, கோதாவரியிலிருந்து கடலில் விணாக கலக்கும் நீரை தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு திருப்ப வேண்டுமென்றால், பல்வேறு நதிகளை இணைக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஆகவே, கிருஷ்ணா, காவிரி, வைகை நதிகள் இணைப்பதன் மூலமாக தமிழகம் போன்ற மாநிலங்களுக்கும், அதேபோல் புதுச்சேரி மற்றும் கேரளா போன்ற மாநிலங்களுக்கும் கூடுதல் தண்ணீர் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது என்ற விஷயத்தை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. தொடர்ந்து வறட்சியால் பாதிக்கப்பட்டு போன்ற மாநிலங்கள் தண்ணீருக்காக ஏங்கி வரும் நிலையில், நதிகள் இணைப்பு குறித்த விஷயத்தை மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது. எனவே, இத்திட்டத்தில் மத்திய அரசு தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.Tags : Union ,Ratan Lal Kataria ,rivers , Rivers Nationalization, Planning, Central Government, Hydro Power Department, Ratan Lal Kataria, Trichy Siva
× RELATED டெல்லியில் மத்திய அமைச்சர்...