×

போக்குவரத்து பூங்காவில் சாலை விதியை அறிந்துகொள்ள பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி: மாநகராட்சி முடிவு

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சாலை விதிகள் குறித்து அறிந்துகொள்ள போக்குவரத்து பூங்காவில் பயிற்சி அளிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகரத்தை விபத்துகள் இல்லாத நகரமாக மாற்றவும், அனைவரும் போக்குவரத்து விதிகளை எளிதில் தெரிந்து கொள்ளவதற்காகவும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்,  நேப்பியர் பாலம் அருகில் ₹2 கோடி  செலவில் போக்குவரத்து பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவில் சாலைகள் அமைக்கப்பட்டு அதில் அனைத்து விதமான போக்குவரத்து குறியீடுகளும் நிறுவப்பட்டுள்ளன. இந்த பூங்காவிற்கு வருபவர்களுக்கு சைக்கிள் வழங்கப்படும். அவர்கள் சைக்கிளில் செல்லும்போது சாலையில் உள்ள அனைத்து விதிகளையும் மதித்து செல்ல வேண்டும். அதன்படி இந்த பூங்காவை பராமரிப்பு மற்றும் குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக  ேஹாண்டா ேமாட்டார்ஸ் நிறுவனத்துடன் சென்னை மாநகராட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. அதன்படி 5 முதல் 8 வயதுள்ள குழந்தைகளுக்கு  போக்குவரத்து விதிகளை விளையாட்டுடன் சேர்ந்து கற்றுத் தர பல்வேறு விளையாட்டு அம்சங்கள்,  9 வயது முதல் 12 வயதுள்ளவர்கள் போக்குவரத்து பூங்காவை சுற்றி வர பைக்குகள், 13 வயது முதல் 16 வயதுள்ளவர்களுக்கு போக்குவரத்து ெதாடர்பான பாடங்களை கற்றுத்தர வகுப்புகள், 16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வாகனம் ஓட்டுவது தொடர்பான பயிற்சி அளிக்க பயிற்சியாளர்கள் ஆகியவற்றை ஹோண்டா நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்நிலையில் இந்த பூங்காவில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சாலை விதிகள் தொடர்பாக பயிற்சி அளிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட  மாணவ, மாணவிகள் போக்குவரத்து பூங்காவை சுற்றுபார்த்து போக்குவரத்து விதிகளை பற்றி அறிந்து கொண்டனர். இந்நிலையில் அனைத்து பள்ளி மாணவர்களையும் போக்குவரத்து பூங்காவிற்கு அழைத்து சென்று பயிற்சி அளிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதுதாடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சாலை விதிகளை மதிக்காமல் சென்றால் விபத்துகள் அதிகம் நடைபெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அதிலும் சென்னையில் அதிக விபத்துகள் ஏற்படுகிறது. இந்நிலையில் இதை குறைக்க குழந்தைகளுக்கு இளமை பருவத்திலியே போக்குவரத்து விதிகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதன்படி சென்னை மாநகராட்சி பள்ளிகளை ேசர்ந்த மாணவர்களை தினசரி அடிப்படையில் பூங்காவிற்கு அழைத்து வந்து பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளோம்.  இவ்வாறு அவர் கூறினார்.



Tags : schoolchildren ,transport park , traffic park,schoolchildren, learn road ,Conclusion
× RELATED ஸ்ரீநகரில் ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து..!!