சென்னை: சென்னை அம்பத்தூர் காவல் ஆய்வாளர் பொற்கொடி ஆன் காவலர்கள் மத்தியில் தனது துப்பட்டாவை பிடித்து இழுத்து தன்னை மானபங்கப்படுத்தி விட்டதாக காவல் இணை ஆணையாளர் அலுவலகத்தில் இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம், முத்தமிழ்நகர் மற்றும் மூகாம்பிகை நகரில் 500 வீடுகளை அகற்ற நடவடிக்கை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஆக்கிரமிப்பு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை காவல் ஆய்வாளர் பொற்கொடி தலைமையில் ஆன குழு அப்புறப்படுத்திவருகிறது. அப்போது நீதிமன்ற ஆணையை கட்டி ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்று கூறிய இளம்பெண்ணை அம்பத்தூர் காவல் ஆய்வாளர் பொற்கொடி துப்பட்டாவை பிடித்து இழுத்து மானபங்கப்படுத்தி விட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அந்த இளம்பெண் சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமாரியிடம் புகார் அளித்துள்ளார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் தன்னை ஆன் காவலர்கள் மத்தியில் மிகவும் மானபங்கப்படுத்தி விட்டதாக அந்தபெண் கண்ணீர் விட்டு கூறினார். என் மீது வழக்குப்பதிவு செய்வதாகவும் அம்பத்தூர் காவல் ஆய்வாளர் பொற்கொடி மிரட்டினார், என்று அந்த இளம்பெண் மிகவும் வருத்தத்துடன் கூறினார்.