×

வைகை அணையின் நீர்வரத்து குறைவு: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அவலம்..!

தேனி: நீர்வரத்து முற்றிலுமாக குறைந்துள்ளதால் வைகை அணையின் நீர்மட்டம் 31 கன அடியாக குறைந்துள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையானது அப்பகுதியைச் சுற்றியுள்ள மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்துவருகிறது. பல லட்சம் ஏக்கரில் பாசனம் நடக்கிறது. இந்நிலையில் கோடை மழை பொய்த்து போனதால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணையில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் வைகை அணைக்கு வரும் நீரின் வரத்து தற்போது முற்றிலுமாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் தற்போது 31 அடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 60 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. வைகை அணை நீர்மட்டம் குறைந்துள்ளதால் அந்த அணையின் மூலம் பயன்பெறும் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் வைகை ஆற்றில் ஆண்டுக்கு 270 நாள் தண்ணீர் செல்லும். இதன் அளவு படிப்படியாக குறைந்து கடந்த 2017ம் ஆண்டு 27 நாட்கள் மட்டுமே நீர் சென்றது. 2018ம் ஆண்டு ஏழு நாள் மட்டுமே வைகையில் நீர் வரத்து இருந்தது. 2019ம் ஆண்டு இதுவரை ஒரு நாள் கூட தண்ணீர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags : Vaigai Dam, Water shortage, Drinking water shortage
× RELATED 104 டிகிரியுடன் வாட்டி வதைக்கும் வெயில்...