×

104 டிகிரியுடன் வாட்டி வதைக்கும் வெயில் நுங்கு, இளநீர், சர்பத் விற்பனை அதிகரிப்பு

* குளிர்பானங்களின் விலையும் உயர்ந்தது

* உடல் உஷ்ணம் குறைக்க மக்கள் ஆர்வம்

கரூர் : கரூர் மாவட்டத்தில் 104 டிகிரியுடன் வெயில் வாட்டி வதைக்கிறது. நுங்கு, இளநீர், சர்பத் விற்பனை அதிகரித்துள்ளது. குளிர்பானங்களின் விலையும் உயர்ந்தது, பொதுமக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர்.தமிழகம் எப்போது ஒரு வெப்பமண்டல பகுதியாகும் குறிப்பாக மார்ச் ஏப்ரல் மே ஆகிய மூன்று மாதங்களில் வெயில் மிகவும் அதிகமாக இருக்கும்.

குறிப்பாக இவ்வாண்டு இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அக்கினி நட்சத்திரம் நேரத்தில் அடிக்கும் வெயிலை காட்டிலும் அதிக அளவில் வெயில் இருக்கும் என கணித்து கூறியுள்ளது. வானிலை ஆராய்ச்சி கணிப்பு பொய்யாகாது என்பது போல தமிழகத்தின் கடந்த இரண்டு மாதங்களாக வெயில் வாட்டி வதைக்கிறது.

கரூர் மாவட்டம் தமிழகத்தில் அதிக வெயில் அடிக்கும் மாவட்டங்களில் ஒன்றாக கடந்த 20 ஆண்டுகளாக கருதப்படுகிறது. காரணம் கரூர் மாவட்டத்தில் மிகவும் குறைவாக மலைக்குன்றுகள், மரங்கள் இருப்பதால் கரூர் மாவட்டத்தை பொருத்தவரைக்கும் பசுமையான இடம் எங்கும் காண முடிவதில்லை.குறிப்பாக வாங்கல், நெரூர், வேலாயுதம்பாளையம், வேட்டமங்கலம், சேமங்கி, தவிட்டுப்பாளையம், அப்பி பாளையத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டும் தென்னை மற்றும் பிற பிறவகை மரங்கள் சற்று அதிகமாக இருப்பதால் இந்த பகுதியில் சற்று குளிர்ச்சியான நிலை காணப்படும். ஆனாலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவிற்கு மழை கிடையாது.

இப்போது கோடை காலம் என்பதால் பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கையில் குடையோடு செல்கின்றனர். கல்லூரி மாணவிகள் மற்றும் பள்ளி மாணவிகள் தலையில் துணி அணிந்து கொண்டு வெயிலின் தாக்கத்தை குறைத்துக் கொள்கின்றனர்.கோடை வெயில் நம்மை வாட்டி வதைக்க போகிறது. இதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் அருமையான கோடை கால பழங்களை நாம் அடிக்கடி சாப்பிட வேண்டும். இந்தியாவில் சிறந்த 20 கோடை கால பழங்களையும் அதன் சிறப்புகளையும் இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

வாழைப்பழம், மா, கொய்யா தர்ப்பூசணி, கிர்ணிப்பழம் முலாம்பழம் திராட்சை பழம், அன்னாசி, பட்டர் ஃப்ரூட்( அவகோடா) பழ வகைகளில் குறிப்பிட்டாலும், பழத்தை விட மக்கள் மத்தியில் கோடை காலங்களில் நுங்கு இளநீர், சர்பத் ,மோர் ஆகிய இயற்கையான பொருட்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பழம் எந்த மாதிரி நேரத்தில் சாப்பிட்டால் அதிக நன்மை தரும் என்பது டாக்டர்களும், மறுத்துவரும் கீழ்க்கண்ட விவரிப்படி தெரிவித்துள்ளனர் பழத்தின் தன்மைகேற்ப அதை வெறும் வயிற்றில், உணவுக்கு முன்பு, உணவுக்கு பின்பு, உணவுடன், படுக்கைக்கு செல்லும் போது என்று சரியாக எடுக்க வேண்டும்.

பழங்களின் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைக்க சரியான முறையில் எடுத்துவர வேண்டும்.கரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக கோடை வெயிலில் தாக்கத்தை குறைத்துக் கொள்ள குளிர்பானங்கள் மற்றும் சர்பத் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக மக்கள் சந்திப்பு அதிகமாக கூடும் பகுதியில் உள்ள கடைகளில் இதுவரை இல்லாத அளவிற்கு குளிர்பானங்களில் விற்பனை அதிகரித்துள்ளது.

அதேபோல் குளிர்பான கடை உரிமையாளர்களும் கோடை காலத்தில் ஜூஸ் மற்றும் பழத்தின் விலைகளையும் உயர்த்தி உள்ளனர். பொதுமக்கள் விலை பற்றி கண்டுகொள்ளாமல் உடலை சீரான தட்பவெப்ப நிலை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அதிக அளவில் குளிர்பானங்கள் மற்றும் பழ ஜூஸ்கள் வாங்கி அருந்துகின்றனர்.

கரூர் மாவட்டத்தை பொருத்தவரை தமிழகத்திலே மிகவும் குறைவான அளவில் பனை மரம் உள்ள மாவட்டமாகும். இதனால் கரூர் பகுதி மக்களின் நுங்கு தீர்த்துக் கொள்வதற்காக தமிழகத்தின் பிற மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, ராம்நாடு, ஈரோடு, தர்மபுரி கிருஷ்ணகிரி ஆகிய பகுதியில் இருந்து ஏராளமான நுங்குகளை வாகனங்கள் மூலம் வண்டியில் கொண்டு வந்து பனையேறும் தொழிலாளர்கள் மற்றும் அவரிடம் மொத்தமாக கொள்முதல் செய்யும் சிறு வியாபாரிகள் அதிக அளவில் விற்பனை செய்கின்றனர்.

ஒரு நுங்கு ஒரு பீஸ் ரூபாய் பத்து அடிப்படையில் வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.தமிழக அரசு தற்போது பனைமர உற்பத்தி பெருக்கப்பதற்காக சுமார் 2 கோடி அளவிற்கு விதை விதித்துள்ளதால் இன்னும் 20 ஆண்டுகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பனை பெரிய அளவில் எண்ணிக்கை அதிகரிக்கும். கரூர் மாவட்டத்தில் குளிர்பானங்கள் மற்றும் அனைத்து வகையான ஜூஸ் மற்றும் பல வகைகள் விற்பனை அதிகரித்து வருகிறது. எது எப்படியோ பொதுமக்கள் உடலுக்கு சத்தான கோடை காலத்திற்கு ஏற்ற உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் வரவேற்க வேண்டிய ஒரு செயலாகும்.

The post 104 டிகிரியுடன் வாட்டி வதைக்கும் வெயில் நுங்கு, இளநீர், சர்பத் விற்பனை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Karur ,Tamil Nadu ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...