சென்னை: நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத இடத்தை நாளை தெரிவிக்க நடிகர் சங்கத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ, கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி போன்ற இடங்களை தேர்வு செய்து கொள்ளலாம் என உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.