×

நடிகை திஷாவுடன் டின்னரா?: கையெடுத்து கும்பிட்ட உத்தவ் தாக்கரே மகன்

மும்பை: நடிகை திஷா பதானி பற்றிய கேள்விக்கு , யுவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே கையெடுத்து கும்பிட்டு பதிலளிக்க மறுத்து விட்டார். ‘எம்.எஸ்.டோனி’, ‘பாஹி-2’, ‘பாரத்’ போன்ற படங்களில் நடித்திருப்பவர் திஷா பதானி. ‘பாஹி-2’ படத்தில் நடித்த போது அந்த படத்தின் நாயகன் டைகர் ஷெராப்புடன் திஷா கிசுகிசுக்கப்பட்டார். பின்னர், இந்த ஜோடி பிரிந்து விட்டது. பின்னர், திஷாவுக்கு சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கேரேவின் மகன் ஆதித்ய தாக்கரேயுடன் நட்பு ஏற்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆதித்ய தாக்கரேயும், திஷாவும் பாந்த்ராவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இரவு உணவுக்கு சென்றிருந்தனர். இதே போன்று கடந்த 11ம் தேதியன்று இரவும் இருவரும் ஜூகுவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு டின்னருக்கு சென்றனர். அவர்கள் ஒன்றாக சென்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று இவர்கள் இருவருக்குமே பிறந்தநாள். ஆதித்ய தாக்கரே 1990, ஜூன் 13ம் தேதி பிறந்தவர். அவருக்கு 29 வயதாகிறது. திஷா 1992, ஜூன் 13ம் தேதி பிறந்தவர். அவருக்கு 27 வயதாகிறது. இந்த நிலையில், நேற்று ஆதித்ய தாக்கரே செய்தியாளர்களை சந்தித்த போது, பிறந்தநாளையொட்டி ஏதாவது விசேஷமான செய்தி இருக்கிறதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, வெறுமனே சிரித்து பதில் ஏதும் கூற ஆதித்ய தாக்கரே மறுத்து விட்டார். எனினும் செய்தியாளர்கள் அவரை விடவில்லை. நடிகை திஷாவுடன் ஒன்றாக ஓட்டலுக்கு டின்னருக்கு சென்றதை மறைமுகமாக குறிப்பிட்ட செய்தியாளர்கள், இந்த முறை மாதோஸ்ரீயில் (ஆதித்ய தாக்கரேயின் இல்லம்) டின்னர் உண்டா அல்லது ஓட்டலில் டின்னரா? என்று கேட்டதற்கு, சிரித்தவாறே கையெடுத்து கும்பிட்ட ஆதித்ய தாக்கரே அந்த கேள்விக்கும் பதிலளிக்க மறுத்து விட்டார்.

Tags : Disha ?: Uthav Thackeray ,Dinara , Actress Disha, Uthav Thackeray's son
× RELATED பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட...