×

திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை

கன்னியாகுமரி: நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் தொடங்கியுள்ளதால் அங்குள்ள அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். குற்றாலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது. பருவமழை தாமதமானதால் கடந்த சில நாட்களாக குற்றால அருவிகள் நீர் வரத்து இன்றி வெறுச்சோடி காணப்பட்டன. இந்நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேலும் குற்றாலம் சுற்று வட்டாரங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. இதனால் ஐந்தருவி, பிரதான அருவிக்கு நீர் வர துவங்கியது. இரண்டு அருவிகளிலும் நீர் கொட்டுவதால் ற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து வருகின்றனர்.

இதேபோல் விழுவதை அறிந்த உள்ளூர் மக்களும் அருவிக்கு வருகை தந்து குளியல் இட்டு மகிழ்கின்றனர். அருவி பகுதியில் வியாபாரம் மேற்கொள்ளும் வியாபாரிகளும் ஒருசேர மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கடந்த 4 நாட்களாக அப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திற்பரப்பு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அருவியில் மொத்தமுள்ள 6 பகுதிகளில் 4 பகுதிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 பகுதிகளில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றன. இதேபோல் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் திற்பரப்பின் மேல்பகுதியில் உள்ள கோதை ஆற்றில் படகு சவாரிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் படகுகள் படகு துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


Tags : floods , Kanyakumari, Waterfalls, Flood, Increase, Tourists, Ban
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி