×

கிரேசி மோகன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

சென்னை: கிரேசி மோகன் மறைவுக்கு முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், திரைக்கதை வசனகர்த்தாவும், திரைப்பட நடிகருமான கிரேசி மோகன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். கிரேசி மோகன், கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே நாடகங்களை எழுதத் தொடங்கினார். இவர், மாது மிரண்டால், சாட்டிலைட் சாமியார், சாக்லேட் கிருஷ்ணா, மதில் மேல் மாது போன்ற பல நகைச்சுவை நாடகங்களை அரங்கேற்றியுள்ளார். அதுமட்டுமின்றி,  பல வெற்றிப் படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்.

அனைவரிடமும் அன்பாக  பழகக்கூடியவரும், நாடகத்துறை மற்றும் திரைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவருமான கிரேசி மோகன் மறைவு தமிழ் நாடகத்துறைக்கும், திரைத்துறைக்கும் ஒரு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக மற்றும் நாடகத் துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Chief Minister ,death ,Crazy Mohan , Crazy Mohan, death, chief minister, mourning
× RELATED முதல்வராக சந்திரபாபு பதவியேற்க உள்ள...