×

ஆந்திரப்பிரதேசத்தில் 5 பேர் துணை முதல்வர்களாக நாளை பதவி ஏற்பு: ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு

ஹைதராபாத்: ஆந்திரப்பிரதேசத்தில் 5 பேர் துணை முதல்வர்களாக நாளை பதவி ஏற்கவுள்ளதாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். சாதிக்கு ஒருவர் வீதம் துணை முதல்வர் பதவியை பகிர்ந்து அளித்துள்ளார். பட்டியல் இனத்தினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், காப்பு சமூகம் ஆகியோருக்கு தலா ஒரு துணை முதலமைச்சர் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். அமராவதியில் நாளை காலை 9.50 மணிக்கு நடைபெறும் விழாவில் 5 துணை முதல்வர்கள் உட்பட 25 அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்.


Tags : Deputy Vice Presidents ,Andhra Pradesh ,announcement ,Jeganmohan Reddy , Andhra Pradesh, deputy chief ministers, promotion
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி