×

இந்தியா முழுவதும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் மருத்துவப் படிப்புகான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

டெல்லி: இந்தியா முழுவதும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் மருத்துவப் படிப்புகான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. கடும் சோதனை மற்றும் கட்டுப்பாடுகளுடன் கடந்த மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தில் மட்டும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு பின்னர் 20 ம் தேதி நடைபெற்றுது. நடப்பு ஆணடுக்கான மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் தகுதி தேர்வை இந்தியா முழுவதும் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் தமிழ் நாட்டில் மட்டும் 14 நகரங்களில் 188 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வை 1.40 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் இணையதளததில் நாளை வெளியாகவுள்ளது. ஆயுர்வேதா, சித்தா, ஆயுஷ் உள்ளிட்ட படிப்புகளுக்கும் நீர் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது.

தேர்வு முடிவுகள் www.nta.ac.in , www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியிட உள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் மருத்துவமுறை படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிபெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் நீட் தேர்வு தாமதமாக நடத்தப்பட்டு இருந்தாலும் அந்த மாநிலத்திற்கான நீட் தேர்வு முடிவுகளும் இன்றே வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags : examination ,India , India, medical course, diet selection, results
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்