×

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் கேரள பிரிவு தலைவர் கொல்லப்பட்டதாக தகவல்

காபூல் : ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை குறி வைத்து அமெரிக்க படையினர் நடத்திய குண்டுவீச்சில், கேரள ஐஎஸ் தலைவர் உட்பட 5 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஐஎஸ் அமைப்புக்கு உலகம் முழுவதும் இருந்து ஆட்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் கேரள பிரிவு தலைவர் ரஷீத் அப்துல்லா. இவர் தனது மனைவி உள்ளிட்ட 21 பேருடன் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆஃப்கானிஸ்தானுக்கு சென்றார்.

மேலும் இவர் ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆட்களைக் கவரும் வகையில் அவர் டெலிகிராம் செயலி மூலம் பல்வேறு வீடியோக்களை வெளீயிட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக அவர் வீடியோக்கள் எதுவும் வெளியாகவில்லை. இதையடுத்து அவரது நிலை குறித்து கேள்வி எழுந்த நிலையில், ரஷீத் அப்துல்லா உட்பட மூன்று இந்தியர்கள் 2 இந்தியப் பெண்கள், 4 குழந்தைகள் அமெரிக்கப்படையின் குண்டு வீச்சில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : ISAF ,Afghanistan ,unit ,Kerala ,organization , Leader , Kerala IS ,killed,US forces
× RELATED ஆப்கானிஸ்தானில் நங்கர்ஹார் மாகாணத்தில் படகு கவிழ்ந்து 20 பேர் உயிரிழப்பு