×

வட கொரியாவுக்கு எதிராக எல்லையில் ஒலிபெருக்கி பிரசாரம்: மீண்டும் தொடங்குவதாக தென் கொரியா அறிவிப்பு

சியோல்: வட கொரியாவுக்கு எதிராக எல்லையில் ஒலிபெருக்கி பிரசாரம் மீண்டும் தொடங்கப்படும் என்று தென் கொரியா அறிவித்துள்ளது. வட கொரியா அணு ஆயுதங்களை அடிக்கடி சோதனை நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்படுகிறது. இதை கண்டிக்கும் வகையில், வட கொரியாவுக்கு எதிரான பிரசுரங்கள் அடங்கிய பலூன்களை தென் கொரிய தன்னார்வலர்கள் கடந்த மாதம் வட கொரியாவுக்குள் அனுப்பினர். அதன் எதிரொலியாக வட கொரியா குப்பைகள்,பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றை பைகளில் போட்டு ராட்சத பலூன்களில் தென் கொரியாவுக்கு அனுப்பியது. ஒரு சில நாட்களில் மட்டும் ஆயிரக்கணக்கான பலூன்களை வட கொரியா வீசியது.

இந்நிலையில் தென் கொரிய தேசிய பாதுகாப்பு இயக்குனர் தலைமையில் உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில்,வட கொரியாவுக்கு எதிராக எல்லையில் ஒலி பெருக்கி பிரசாரத்தை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு நாட்டு எல்லையில் வடகொரியாவை நோக்கி ராட்சத ஒலி பெருக்கிகளை வைத்து அதில் அந்த நாட்டுக்கு எதிராக பிரசாரம் செய்ய தென் கொரியா திட்டமிட்டுள்ளது. இது போன்ற செயல்களுக்கு எதிராக வட கொரியா நேரடி ராணுவ தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் இதனால் வீரர்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு தென் கொரிய ராணுவ கமாண்டர்களுக்கு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

The post வட கொரியாவுக்கு எதிராக எல்லையில் ஒலிபெருக்கி பிரசாரம்: மீண்டும் தொடங்குவதாக தென் கொரியா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : North Korea ,South Korea ,SEOUL ,Korean Peninsula ,Dinakaran ,
× RELATED அமெரிக்கா – தென்கொரியா படைகள் கூட்டு...