×

கும்மிடிப்பூண்டி அருகே உருட்டு கட்டையால் தந்தை தாக்கியதில் மகன் பலி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே உருட்டு கட்டையால் தந்தை தாக்கியதில் மகன் பரிதாபமாக பலியானார். கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை காவல் நிலையத்துக்கு  உட்பட்ட பெரவள்ளூரை சேர்ந்தவர் ரவி(61). இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி, 3 பிள்ளைகள் உள்ளனர். திருமணமான இவரது மகன் ஹரிதாஸ்(35), சோழவரம் ஒன்றியம் இருளிப்பட்டு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தந்தை, மகன் இருவரும் இணைந்து அரசு நிதியுதவி மூலம் வீடுகட்டும் திட்டத்தின்கீழ், புதிதாக வீடு கட்டி வருகின்றனர். அதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் வீடு கட்டும் விவகாரம் தொடர்பாக ஹரிதாசுக்கும், தந்தை ரவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக ரவி உருட்டு கட்டையை எடுத்து அடித்ததில் மகன் ஹரிதாஸ் மயங்கி விழுந்தார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே ஹரிதாஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
 போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர்.

Tags : gummidipoondi , gummidipoondi, Father, scroll tumor, son killed
× RELATED மகனை கொன்ற வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை