கொரட்டூர் ஏரியில் மீன்கள் திடீரென செத்து மிதந்தன

சென்னை: கொரட்டூர் ஏரியில் செத்துமிதக்கும் மீன்களால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். சென்னை கொரட்டூர் ஏரி சுமார் 650 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதை  பொதுப்பணித்துறை பராமரித்து வருகிறது. கடந்தாண்டு பருவமழை பெய்யாததால், நீர்வரத்து குறைந்து தற்போது வறண்ட நிலையில் காணப்படுகிறது. ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் ஏரிக்குள் இருந்த மீன்கள் தண்ணீரின் வெப்பம் மற்றும் பூச்சி போன்ற உணவுகள் கிடைக்காமல் செத்து மிதக்கின்றன. இந்த மீன்களை பறவைகள் கொத்திக்கொண்டு செல்லும்போது அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் விழுந்துள்ளது.

இதன்காரணமாக கொரட்டூரின் பெரும்பாலான பகுதியில் அழுகிய மீன்களின் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மக்களும் சுகாதாரசீர்கேடு தொடர்பாக பீதியில் உள்ளனர். ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் தண்ணீரும் மாசுப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை குடிக்கும் கால்நடைகளுக்கு நோய் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பொதுப்பணி துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் சென்னை மாநகரட்சி, அம்பத்தூர் அண்ணா நகர் மண்டல ஊழியர்கள் விரைந்து வந்து மீன்களை எடுத்து அருகில் இருந்த ஏரிக்கு அருகில் சுகாதாரமான முறையில் மீன்களை கொட்டி புதைத்தனர்.

Related Stories:

More
>