விர்ஜின் தீவுகள் முதலிடம், சுவிட்சர்லாந்து 5வது இடம் வரி ஏய்ப்பு சொர்க்க பூமியாக உள்ள நாடுகளின் பட்டியல் வெளியீடு

புதுடெல்லி: வரி ஏய்ப்பு செய்பவர்களின் சொர்க்க பூமியாக உள்ள நாடுகளின் தர வரிசை பட்டியல் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் 25 இடங்களில் உள்ள நாடுகளின் இருந்துதான் இந்தியாவில் அதிகமாக அந்நிய நேரடி முதலீடு (எப்டிஐ) மேற்கொண்டுள்ளது என தெரிய வந்துள்ளது. உலக அளவில் வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்க பூமியாக கருதப்படும் நாடுகளின் தர வரிசை பட்டியலை டாக்ஸ் ஜஸ்டிஸ் நெட்வொர்க் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. முதல் முறையாக இந்த தர வரிசை ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 64 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இங்கு ஆண்டுக்கு சுமார் 50,000 கோடி டாலர் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்யப்படுகிறது.

இதில் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், பெர்முடா, கேமேன் தீவு ஆகியவை முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகியவை 4 மற்றும் 5வது இடங்களை பிடித்துள்ளன. இங்கிலாந்து 13வது இடத்தில் உள்ளது. சிங்கப்பூர் (8வது இடம்), ஐக்கிய அரபு எமிரேட் (12), மொரீஷியஸ் (14) சைப்ரஸ் (18) ஆகியவை முதல் 25 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன. இவை இந்தியாவில் அதிகமாக அந்நிய நேரடி முதலீடு செய்துள்ளன. இதுபோல், லக்சம்பர்க் (6), ஜெர்சி (7), பகாமாஸ் (9), ஹாங்காங் (10), ஜெர்மனி 24), பிரான்ஸ் (22), அமெரிக்கா (25) ஆகியவையும் மேற்கண்ட பட்டியலில் உள்ளன. இந்த நாடுகளில் இருந்துதான் இந்தியாவுக்கு அந்நிய நேரடி முதலீடு அதிகமாக வந்துள்ளது.

கடந்த 2018 -19 நிதியாண்டு புள்ளி விவரப்படி சிங்கப்பூர்தான் அதிக அளவில் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு மேற்கொண்டுள்ளது. கடந்த நிதியாண்டின்படி, இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டில் ஜப்பான் 5வது இடத்தில் உள்ளது. ஆனால் மேற்கண்ட தரவரிசையில் இந்த நாடு இடம்பெறவில்லை. சுவிட்சர்லாந்தில்தான் இந்தியர்களின் கருப்புப்பணம் ஏராளமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதுவரி ஏய்ப்பாளர்களின் சொர்க்க பூமியாக கருதப்படும் இந்த நாடு தர வரிசையில் 5வது இடத்தில் உள்ளது. மேற்கண்ட தர வரிசை பட்டியல் முதல் முறையாக தற்போதுதான் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: