×

ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற நடவடிக்கைக்கு ஆளான ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடையாது : பள்ளிக்கல்வித்துறை

சென்னை : ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற நடவடிக்கைக்கு ஆளான ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் செய்ய வேண்டும் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவில் அங்கம் வகிக்கும் ஆசிரியர்கள், மற்றும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் நடத்தி இருந்தனர். பலமுறை அரசு எச்சரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டதால் தமிழகம் முழுவதும் ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டு பணியிடமாற்றம் செய்வது உள்ளிட்ட துறைரீதியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டன.    

இந்நிலையில் ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற நடவடிக்கைக்கு ஆளான ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது..இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில்,ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற நடவடிக்கைக்கு ஆளான ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இல்லை என்றுமாம் 17பி விதிப்படி நடவடிக்கைக்கு உள்ளவர்களின் பெயர்கள் பதவி உயர்வு பட்டியலில் சேர்க்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4000 பட்டதாரி ஆசிரியர்கள் முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட உள்ள நிலையில்,. பள்ளிக்கல்வித்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.



Tags : Teachers ,protest ,School , Jacotto-Geo, Authors, School Department, Circular
× RELATED புழல் டீச்சர்ஸ் காலனியில் நாய் கடித்து சிறுவன் படுகாயம்