×

வியாபாரியை மிரட்டி 80 ஆயிரம் லஞ்சம் திருவல்லிக்கேணி போலீசார் 4 பேர் கன்ட்ரோல் ரூமுக்கு அதிரடி மாற்றம்: போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு

சென்னை: வெளிநாட்டு பொருட்கள் இறக்குமதி செய்யும் வியாபாரியை லாட்ஜில் வைத்து மிரட்டி ₹80 ஆயிரம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில், திருவல்லிக்கேணி போலீசார் 4 பேரை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி போலீஸ் கமிஷனர்  ஏ.ேக.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள லாட்ஜிகளில் சட்ட விரோதமாக தங்கி உள்ளவர்கள் குறித்து ஆய்வு செய்ய அடிக்கடி போலீசார் சோதனை நடத்துவது வழக்கம். அதன்படி, கடந்த வாரம்  திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள லாட்ஜ் ஒன்றில் திருவல்லிக்கேணி காவல் நிலைய காவலர்களான ராஜேஷ், சன்னிலார்டு, அசோக்குமார், ஆனந்தன் ஆகியோர் சோதனை நடத்தினர். அப்போது வெளிநாட்டில் இருந்து மின்னணு  பொருட்கள் இறக்குமதி செய்து விற்பனை செய்யும் சாகுல் அமீது என்பவர் தங்கி இருந்த அறையில் 4 போலீசாரும் சோதனை நடத்தினர். அப்போது 300 லேப்டாப், 500 செல்போன்கள், 30 கிராம் தங்கம் இருந்தது தெரியவந்தது.

உடனே அறையில் இருந்த வியாபாரி சாகுல் அமீத்திடம் பொருட்களுக்கான ஆவணங்களை கேட்டனர். அதற்கு அவர் ஆவணங்கள் தற்போது என்னிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார். அதைதொடர்ந்து 4 காவலர்களும் வியாபாரி சாகுல்  அமீதை மற்றொரு லாட்ஜிக்கு அழைத்து சென்று பொருட்களை பறிமுதல் செய்யாமல் இருக்க ₹2 லட்சம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அதற்கு தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று வியாபாரி தெரிவித்துள்ளார். பின்னர் கடும்  போராட்டத்திற்கு பிறகு ₹80 ஆயிரம் பணத்தை 4 காவலர்களும் லஞ்சமாக வாங்கி கொண்டு வியாபாரியை விடுவித்துள்ளனர்.பின்னர் வியாபாரி சாகுல் அமீது சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், திருவல்லிக்கேணி துணை கமிஷனரிடமும் சோதனை என்ற பெயரில் ₹80 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக 4 காவலர்கள் மீது புகார் அளித்தார். அதன்படி  சம்பவம் குறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் துணை கமிஷனருக்கு உத்தரவிட்டார். விசாரணையில் வியாபாரியிடம் பொருட்கள் பறிமுதல் செய்யாமல் இருக்க ₹80 ஆயிரம் பணத்தை லஞ்சமாக பெற்றதாக 4  காவலர்களும் ஒப்புக்கொண்டனர்.

அதைதொடர்ந்து விசாரணை அறிக்கையை துணை கமிஷனர் போலீஸ் கமிஷனரிடம் ஒப்படைத்தார். அதன்படி போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் வியாபாரியை மிரட்டி ₹80 ஆயிரம் பணத்தை லஞ்சமாக பெற்ற காவலர்கள் ராஜேஷ்,  சன்னிலார்டு, அசோக்குமார், ஆனந்தன் ஆகிய 4 பேரையும் அதிரடியாக சென்னை கிழக்கு மண்டல காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : persons ,AK Vishwanathan ,Tirunelveli , 80 thousand ,businessman, Police convicts ,AK ,Padmanabhan
× RELATED சென்னையில் ரயில் பயணிகளிடம் தொடர் திருட்டு: 2 பேர் மீது குண்டாஸ்