இந்தியா- வங்கதேச எல்லையில் முதல் பேருந்து சேவை

டாக்கா : சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இந்தியா- வங்கதேச எல்லையில் முதன்முறையாக பேருந்து சேவை இயக்கப்பட்டுள்ளது. கடந்த 26-ம் தேதி வங்கதேசம் தலைநகர் டாக்காவிலிருந்து 13 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற பேருந்து ஒன்று, நேற்று காலை இந்தியாவின் எல்லை பகுதியான ஜல்பைகுரி((jalpaiguri)) மாவட்டத்தை வந்தடைந்தது.

இந்தியா- வங்கதேச எல்லை பகுதிகளில் வசிக்கும் மக்கள், உறவினர்களை சந்திக்கவும், தொழில் சார்ந்த பணிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தா உள்ளிட்ட நகரங்கள் வழியாக சென்று வருகின்றனர். தற்போது பயண தூரம் சுமார் 50 கிலோ மீட்டர் குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


× RELATED பாவூர்சத்திரம் அருகே எல்லைப்புளியில்...