×

புலம் பெயர்ந்த காஷ்மீரிகளில் 86% பேர் பாஜவுக்கு வாக்களிப்பு: அஞ்சல் வாக்குகளிலும் பாஜவுக்கு 44%

புதுடெல்லி: நாட்டின் பிற மாநிலங்களில் குடியேறியுள்ள காஷ்மீர் மக்களுக்கு, புலம் பெயர்ந்த மாநிலங்களில் இருந்து வாக்களிக்கும் சிறப்பு உரிமை உள்ளது. இதனை தற்போதைய தேர்தலில் 13,537 பேர் பயன்படுத்தி உள்ளனர். இவர்களில் 86  சதவீதத்தினர், அதாவது 11,648 பேர் பாஜவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதிலும் குறிப்பாக அனந்த்நாக்கில் இருந்து குடிபெயர்ந்த 8,166 பேரில் 7,251 பேரும், நகரில் புலம்பெயர்ந்த 2,839 பேரில் 2,584 பேரும், பாரமுல்லாவில் 2,532 வாக்காளர்களில் 1,813 பேரும் பாஜ.வுக்கு வாக்களித்தனர். இவை முறையே 71, 56, 23  சதவீதமாகும்.

இத்தொகுதிகளில் பாஜவுக்கு கிடைத்த மொத்த வாக்கு 22,750 ஆகும். இதில் 13,537 பேர் புலம் பெயர்ந்த வாக்காளர்களாவர். கடந்த 1980ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் ஜம்மு காஷ்மீரில் உள்ள காஷ்மீரி இந்துக்கள் அங்கிருந்து  அடித்து விரட்டப்பட்டனர். இதனால் ஏராளமான மக்கள் வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்தனர். இதையடுத்து தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கையில், அவர்கள் பிற மாநிலங்களில் இருந்து வாக்களிக்கும் சிறப்பு உரிமை  அளிக்கப்பட்டுள்ளது.Tags : Kashmiris ,Bajah , migrant ,Kashmir, 86% voted , BJP: 44%
× RELATED தமிழகம், புதுச்சேரியில் மொத்தமுள்ள 40...