திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரமண தீட்சிதலுக்கு மீண்டும் தலைமை அர்ச்சகர் பதவி?

திருமலை: ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்க உள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோயில் தலைமை அர்ச்சகராக மீண்டும் ரமண தீட்சிதலு நியமிக்கப்படலாம் என அர்ச்சகர்கள் தெரிவிக்கின்றனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தலைமை அர்ச்சகராக பணிபுரிந்த கொல்லப்பல்லி ரமண தீட்சிதலு உள்ளிட்ட 4 அர்ச்சகர்களுக்கு வயது மூப்பு காரணமாக தேவஸ்தானத்தால் கட்டாய ஓய்வு அளிக்கப் பட்டது.

இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெகன்மோகன் ரெட்டி, இவர்களுக்கு ஆதரவு அளித்தார்.இந்நிலையில் ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்  ஜெகன்மோகன் ரெட்டி வரும் 30ம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பின்போது ரமண தீட்சிதலு உட்பட 4 வம்ச பரம்பரை அர்ச்சகர்களை மீண்டும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சேவை செய்ய அனுமதிப்பதற்கான  அறிவிப்பை வெளியிடுவார் என வம்ச பரம்பரை அர்ச்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: