×

அரியானாவில் பாஜ ‘ஆல் பாஸ்’


அரியானா மாநிலத்தின் 10 தொகுதிகளிலும் பாஜ வெற்றி முகத்தில் உள்ளது. பாஜ ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்களில் அரியானாவும் ஒன்று என்பது வாக்கு எண்ணிக்கையில் தெளிவானது. மாநிலத்தின் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 9ல் பாஜ பெரும்பான்மை முன்னிலை வகித்தது. ஒரு இடத்தில் காங்கிரஸ் முன்னிலை கண்டது. மாலை 4 மணி நேர நிலவரத்தில் அந்த ஒரு தொகுதியிலும் காங்கிரஸ் அதிர்ச்சி பின்னடைவை சந்தித்தது.

அதையடுத்து அரியானாவின் மொத்த தொகுதிகளும் பாஜ வசம் செல்லும் சூழல் உருவானது. ஜன்நாயக ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் நிலை இந்த முறை மிகவும் பரிதாபத்தில் உள்ளது. மாநிலத்தின் ஒரு தொகுதியில் கூட அக்கட்சி வெற்றி பெறவில்லை. அரியானாவின் முக்கிய கட்சியான இந்திய தேசிய லோக் தளமும் ஆட்டம் கண்டுள்ளது.

அம்பாலாவில் பாஜ வேட்பாளர் ரட்டன் லால் கட்டாரியா காங்கிரஸ் வேட்பாளர் செல்ஜாவை காட்டிலும் அதிக வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். பிவானி-மகேந்தர்கரில், பாஜ வேட்பாளர் தரம்பீர் சிங் காங்கிரஸ் வேட்பாளர் ஷ்ருதி சவுத்ரிக்கு பின்னடைவு ஏற்படுத்தினார். சண்டிகரும் வளைப்பு: சண்டிகார் யூனியன் பிரதேசத்தின் ஒரே தொகுதியான சண்டிகாரில், நடிகையாக இருந்து பின்னர் அரசியல்வாதியாக மாறிய கிரண் கெர், பாஜ சார்பில் போட்டியிட்டார். கடந்த முறையும் இந்த தொகுதியில் அவர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

சண்டிகாரில் 70.62 சதவீத வாக்குகள் பதிவானது. தொகுதியில் 2ம் முறையாக போட்டியிடும் கிரண், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பவன் குமார் பன்சாலை விட 7,948 வாக்கு அதிகம் பெற்றிருந்தார். நான்கு முறை எம்.பியான பன்சால், தற்போது பரிதாப தோல்வியை தழுவ உள்ளார். ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட ஹர்மோகன் தவானும் குறைவான வாக்குகள் பெற்றுள்ளார்.

Tags : Haryana, Bhaj, 'All Boss'
× RELATED 4வது முறையாக நம்பிக்கை ஓட்டு கோரும் நேபாள பிரதமர்