×

4வது முறையாக நம்பிக்கை ஓட்டு கோரும் நேபாள பிரதமர்

காத்மாண்டு: நேபாள அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஒரு கட்சி விலக்கி கொண்ட நிலையில் பிரதமர் பிரசந்தா நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். நேபாளத்தில் பிரதமர் பிரசந்தா தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஆளும் அரசுக்கு அளித்து வந்த ஜனதா சமாஜ்வாடி நேபாள் என்ற கட்சி சமீபத்தில் இரண்டாக உடைந்தது. அந்த கட்சியை சேர்ந்த 7 எம்பிக்கள் ஜனதா சமாஜ்வாடி என்ற புதிய கட்சியை தொடங்கினர். இந்த கட்சிக்கு நேபாள தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியது. இதனையடுத்து அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கடந்த வாரம் விலக்கி கொண்டது. இதனால் நாடாளுமன்றத்தில் அரசு பெரும்பான்மை இழந்தது. ஆனால் அரசுக்கு ஆபத்து இல்லை என்று கூறப்படுகிறது.

275 எம்பிக்கள் கொண்ட நாடாளுமன்றத்தில், பெரும்பான்மைக்கு 138 எம்பிக்கள் ஆதரவு வேண்டும். நேபாள கம்யூ.(யுஎம்எல்) கட்சிக்கு 77 எம்பிக்கள், நேபாள கம்யூ.(மாவோயிஸ்ட் சென்டர்)கட்சி 32, ராஷ்டிரிய சுதந்திரா கட்சி 21,ஜனதா சமாஜ்வாடி 7, சிபிஎன்-யுஎஸ் கட்சிக்கு 10 எம்பிக்களும் உள்ளனர். ஒரு கட்சி அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கி கொண்டால் 30 நாட்களுக்குள் பிரதமர் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும். அந்த வகையில் பிரதமர் பிரசந்தா இன்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். பிரசந்தா பதவியேற்ற ஒன்றரை ஆண்டுக்குள் அவர் சந்திக்கும் 4வது நம்பிக்கை வாக்கெடுப்பு இதுவாகும்.

The post 4வது முறையாக நம்பிக்கை ஓட்டு கோரும் நேபாள பிரதமர் appeared first on Dinakaran.

Tags : Nepal ,Kathmandu ,Prasanda ,Prashant ,
× RELATED நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாள பிரதமர் பிரசந்தா வெற்றி