×

சென்னையில் உள்ள 3 எம்பி தொகுதிகளில் பார்வையாளர் உள்ளிட்ட 684 பேர் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை: பணியில் 1800 ஊழியர்கள்

சென்னை: சென்னையில் உள்ள 3 எம்பி தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 684 பேர் முன்னிலையில் நடக்கிறது. இப்பணியில் 1800 ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். சென்னை மாவட்டடத்தில் உள்ள 3 மக்களவை தொகுதிகள் மற்றும் பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. அதன்படி வட சென்னை மற்றும் பெரம்பூர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னை தொகுதிக்கு லயோலோ கல்லூரியிலும், தென் சென்னை தொகுதிக்கு அண்ணா பல்கலைக்கழகத்திலும் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. வட சென்னை தொகுதியில் 22 சுற்றுகளாகவும், தென் சென்னை தொகுதியில் 21 சுற்றுகளாகவும், மத்திய சென்னை தொகுதியில் 19 சுற்றுகளாகவும் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. தென்சென்னை தொகுதியில் உள்ள சோழிங்கநல்லூர் தொகுதியில் 30 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. மற்ற அனைத்து தொகுதிகளிலும் 14 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இவற்றை கண்காணிக்க மேற்பார்வையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்ட 684 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மத்திய சென்னை மற்றும் வட சென்னை தொகுதிக்கு 107 மேற்பார்வையாளர்கள், 118 உதவியாளர்கள், 119 நுண் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தென் சென்னை தொகுதிக்கு 126 மேற்பார்வையாளர்கள், 137 உதவியாளர்கள், 138 நுண் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பெரம்பூர் சட்டப்பேரவை ெதாகுதிக்கு 22 மேற்பார்வையாளர்கள், 28 உதவியாளர்கள், 19 நுண்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதை தவிர்த்து வாக்கு எண்ணிக்கை பணியில் மத்திய, மாநில அரசுகளை சேர்ந்த 1800 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கான மையங்களை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று ரிப்பன் மாளிகையில் நடந்தது. சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் தலைமையில் மூன்று எம்பி தொகுதிக்கான பார்வையாளர்கள், கூடுதல் ேதர்தல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் இந்த பணி நடந்தது. இதை தொடர்ந்து இவர்களுக்கான கடைசி கட்ட பயிற்சி முகாம் ேநற்று நடந்தது.

Tags : constituencies ,voters ,Chennai ,viewer , Chennai, visitor, counting number
× RELATED அதே முகவரியில் தொடர்ந்து...