×

முதல்வருக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 65 வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். கவர்னர் பன்வாரிலால் புரோகித் மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பி வைத்தார். பிறந்த நாள் வாழ்த்துக் கடிதம் அனுப்பிய கவர்னருக்கு முதல்வர் நன்றி தெரிவித்து அனுப்பிய கடிதத்தில், ‘எனது பிறந்த நாளை முன்னிட்டு நீங்கள் அனுப்பிய மலருக்கும், வாழ்த்துக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Modi ,birthday greetings ,chief minister , Chief Minister, Modi, happy birthday, greetings
× RELATED இந்திய தேர்தல் ஆணையம் நடுநிலையை...