×

நாகை அருகே காரில் கடத்தப்பட்ட இளம்பெண் உயிரிழந்ததை விபத்து என்று கூறி போலீசார் வழக்குபதிவு செய்ய முயன்றதால் கிராம மக்கள் போராட்டம்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே காரில் கடத்தப்பட்ட இளம்பெண் உயிரிழந்ததை விபத்து என்று கூறி போலீசார் வழக்குபதிவு செய்ய முயன்றதால் கிராம மக்கள்  காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நாகப்பட்டினம் மாவட்டம் கேசவம்பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்த 22 வயதான கவியரசி என்பவர் உயிரிழந்த அந்த இளம்பெண் ஆவார். கடத்தப்பட்ட இளம்பெண் உயிரிழந்ததை விபத்து என்று கூறி போலீசார் வழக்குபதிவு செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனையறிந்த கேசவம்பாளையம் கிராம மக்கள் பொறையாறு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மற்றும் கோவையில் வேலை இருப்பதாக கூறி சாலையில் சென்று கொண்டிருந்த கவியரசி மற்றும் அபிநயாவை காரில் வந்த சிலர் அழைத்துள்ளனர். இதற்க்கு மறுப்பு தெரிவித்த அந்த இளம்பெண்களை அந்த கும்பல் வலுக்கட்டாயமாக காரில் ஏற்ற முயற்சி செய்துள்ளது. அப்போது தவறி விழுந்ததில் இரு பெண்களும் பலத்த காயமடையந்தனர். பின்னர் இருவரும் சிகிச்சைக்காக திருவாரூர் அரச மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த கவியரசி சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார். படுகாயங்களுடன் திருவெண்காட்டை சேர்ந்த அபிநயா சிகிச்சை பெற்று வருகிறார்.


Tags : Village People , Nagappa, teenager, accident, police, caste villagers, fight
× RELATED திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு...