×

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

*378 மனுக்கள் பெறப்பட்டது

திருவண்ணாமலை : ஆரணி அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தில் கல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நடந்தது. அதில், ஆர்டிஓ மந்தாகினி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் குமரன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், முதிேயார் உதவித்தொகை, பட்டா மாற்றம், வீட்டுமனைப் பட்டா, சுய வேலை வாய்ப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்ததி 378 பேர் மனு அளித்தனர். அதன்மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஆரணி தாலுகா, முள்ளண்டிரம் கிராமத்தில் கல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அந்த கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு அளித்தனர். கல்குவாரி அமைப்பதால், கிராமத்தின் சுற்றுச்சூழல் பாதிப்பதாகவும், விளை நிலங்களில் பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்படுவதாகவும் மனுவில் தெரிவித்திருந்தனர். மேலும், கல்குவாரி அமைக்கக்கூடாது என ஊராட்சி மன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தொடர்ந்து நடைபெறும் கல்குவாரியை தடுத்து நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், கலசபாக்கம் அடுத்த நவாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா என்பவர், அவரது பெயரில் உள்ள காஸ் ஏஜென்சியை தொடர்ந்து நடத்தவிடாமல் அபகரித்து மோசடியில் ஈடுபடும் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்ேகாரி மனு அளித்தார். மக்கள் குறைதீர்வு கூட்டத்தை முன்னிட்டு, கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்களை தடுக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மனு அளிக்க அலுவலகத்துக்கு வந்தவர்கள் கொண்டுவந்த பை மற்றும் பொருட்களை சோதித்த பிறகே அனுமதித்தனர்.

The post திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Village People Collector ,People's Reduction Meeting ,Thiruvandamalayan ,Thiruvannamalai ,Arani ,Village People ,People's Deferment Meeting ,
× RELATED திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான...