×

ஏற்காடு மலைப்பாதையில் சேதமடைந்த தடுப்பு கம்பி: விபத்து அபாயம்

சேலம்: ஏற்காட்டுக்கு செல்லும் மலைப்பாதையின் வளைவில் போடப்பட்டுள்ள தடுப்புக்கம்பி வாகனம் மோதியதால் சேதமடைந்துள்ளது. தற்போது சீசன் தொடங்கியுள்ளதால் இதனை சரி செய்ய சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது. இதனால் கர்நாடகம், கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதியில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 26 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஏற்காட்டுக்கு 20 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். ஏற்காட்டில் உள்ள பாக்கோடா பாய்ண்ட், லேடீஸ், ஜென்ஸ் சீட், படகு இல்லம் உள்ளிட்ட இடங்களை பார்க்க குடும்பம், குடும்பாக சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் செல்லும் ஏற்காடு, மலைப்பாதையின் 1வது வளைவுச்சாலை, அடிவாரத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வளைவுச்சாலையில் போடப்பட்டுள்ள தடுப்புச் சுவர், சில நாட்களுக்கு முன்னர் வாகனம் மோதியதில் சேதமடைந்தது. இதனை நெடுஞ்சாலைத்துறையினர் சரி செய்யாமல் உள்ளனர். நடப்பு மாதம் ஏற்காட்டில் மலர் கண்காட்சி தொடங்க உள்ளது. இதையொட்டி தற்போது வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை விடவும் கூடுதலான எண்ணிக்கையில் பயணிகள் வருகை தருவர். இந்நிலையில் சேதமான தடுப்புச் சுவரால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட அதிகளவில் வாய்ப்பு உள்ளது. எனவே, பயணிகளின் நலனைக் கருத்தில்கொண்டு சேதமான மலைப்பாதை தடுப்புச் கம்பியை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Yercaud ,mountain range , Yercaud, mountain trail, barrier
× RELATED நர்சரி கார்டனில் தீ விபத்து