×

நைஜர் நாட்டில் பெட்ரோல் டேங்கர் தீப்பிடித்து 58 பேர் பலி

நயாமே: நைஜர் நாட்டில் பெட்ரோல் நிரப்பி வந்த ஆயில் டேங்கர் ஒன்று கவிழ்ந்து விழுந்து தீப்பிடித்ததில் 58 பேர் உடல்கருகி பலியாகினர்.மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜர் தலைநகர் நயாமேயில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெட்ரோல் ஏற்றிய டேங்கர் லாரி ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.

அந்த வழியில் இருந்த ரயில் பாதையைக் கடக்கும்போது டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் இருந்து கசிந்த பெட்ரோலை பிடிக்க மக்கள் அடித்து கொண்டனர். அப்போது அது திடீரென வெடித்து சிதறியது. இதில் பெட்ரோல் பிடித்து கொண்டிருந்தவர்களில் 58 பேர் உடல்கருகி பலியாகினர். 36 பேர் தீக்காயமடைந்தனர். மேலும் அருகில் சாலையோர வீடுகளில் பலவும்  தீக்கிரையாகின.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Niger , Niger Country, petrol, tanker, fire, kills
× RELATED நைஜரில் இருக்கும் இந்தியர்கள்...