×

இந்தியாவுக்கு மலிவு கச்சா எண்ணெய் வழங்க உத்தரவாதம் இல்லை: அமெரிக்கா பகீர்

புதுடெல்லி: இந்தியாவுக்கு மலிவு விலையில் கச்சா எண்ணெய் சப்ளை செய்வதற்கு உத்தரவாதம் தர முடியாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்தது. ஆனால், இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மட்டும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய 6 மாதங்களுக்கு சலுகை அளித்தது. இதுவும் முடிந்து விட்டது.  ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது இந்தியாவுக்கு லாபகரமானது.

 இந்நிலையில், இந்தியா வந்துள்ள அமெரிக்க வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஈரான் பெற்ற சலுகைகள் இந்தியாவுக்கு பறிபோகிறது என்பதற்காக, இதை ஈடுகட்டும் வகையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெயை  மலிவு விலையில் சப்ளை செய்ய உத்தரவாதம் தர முடியாது. அமெரிக்காவில் இவை தனியார்வசம் உள்ளன. அவர்களை இந்த விலைக்குதான் சப்ளை செய்ய வேண்டும் என அரசு நிர்பந்திக்க முடியாது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,America , India, Cheap crude ,oil,provide, America
× RELATED இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா...