×

இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறுவது தெரிந்து தான் 3 அதிமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

மதுரை: திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நடைபயணமாகம் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சரவணனை ஆதரித்து  திருப்பரங்குன்றம் பதினாறு கால் மண்டபத்தில் இருந்து தென்பரங்குன்றம் வரை நடைபயணமாகச் சென்று அவர் வாக்குச் சேகரித்தார். மேலும் சன்னதி தெருவில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வந்தார். அப்போது அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டினர். அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் உள்ளிட்டோருடன் அவர் கலந்துரையாடினார். தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற மே-19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

நேற்றைய தினம், ஒட்டப்பிடாரம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், இன்று திருப்பரங்குன்றத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இந்த இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றிபெறும். ஏழை எளிய மக்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் நீக்கப்படும். திமுக ஆட்சிக்காலத்தில் கேபிள் கட்டணம் எவ்வளவு இருந்ததோ அந்த தொகையை நடைமுறைப்படுத்தப்படும். மேலும் திருப்பரங்குன்றம் தொகுதியில் அனைத்து வசதிகளும் போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்தப்படும் என்று கூறினார். ஏற்கனவே இந்த தொகுதியில் வெற்றி பெற்ற ஏ.கே.போஸ் இறந்ததால் இடைத்தேர்தல் வந்துள்ளது. ஜெயலலிதா சுயநினைவில்லாமல் இருப்பதை பயன்படுத்திக் கொண்ட அதிமுக-வினர், அவருடைய விரல் ரேகையை எடுத்து திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸை போட்டியிட வைத்தனர். இதை கண்டறிந்த திமுக வேட்பாளர் சரவணன், அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

ஜெயலலிதாவை வைத்தே பொய் சொல்லி வெற்றி பெற்றவர்கள் அ.தி.மு.க.வினர் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இடைத்தேர்தலில் தி.மு.க.வெற்றி பெறுவதும், ஆட்சி அமைப்பதும் உறுதி என்று தெரிந்து தான் எடப்பாடி பழனிசாமி 3 எம்.எல்.ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதற்காக தான் நான் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை திமுக கொண்டுவந்துள்ளது. இதையடுத்து இன்று மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள விளாச்சேரியில் இருந்து பிரசாரத்தை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து திருநகர், ஹார்விட்டி, அவனியாபுரம், பெருங்குடியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK ,AIADMKs ,victory ,Stalin ,by-election , Thiruparankundram, Stalin, election, campaign
× RELATED சாலை விபத்தில் படுகாயமடைந்த திருமழிசை திமுக பேரூராட்சி தலைவர் காலமானார்