×

மோடிக்கு மீண்டும் கடிதம் எழுதிய இம்ரான் கான் ... இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

இஸ்லாமாபாத்: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்சினைகள் தொடர்பாக இருநாடுகள் இடையே அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம் மூலம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். பிரச்சினைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு முன் வருமாறு கடந்த மாதம் 23-ம் தேதி பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் கடிதம் அனுப்பியிருந்தார். மீண்டும் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள இம்ரான் கான் காஷ்மீர் பிரச்சினையை மையப்படுத்தி மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக பிரத்யேக திட்டம் மற்றும் வியூகம் எதுவும் பாகிஸ்தான் பிரதமர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை. ஏற்கனவே பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பியதை ஏற்று இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் இடையே கடந்த செப்டம்பரில் 23-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதன்பிறகு ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Imran Khan ,Modi ,India ,Pakistan , Prime Minister Modi, India, Pakistan, Imran Khan, Kashmir issue, talks
× RELATED கெஜ்ரிவாலை கூட ஜாமீன்ல...